என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள்
நீங்கள் தேடியது "மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள்"
நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தினமும் பலத்த மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளில் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறையில் (பிடிஓ) 12 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 11 செ.மீ., பெரியாறில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் ஜிபசார் ஆகிய பகுதிகளில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RainInTamilNadu #SouthwestMonsoon

×

X